உதவி செய்வதாக நடித்து முதாடிக்கு பெண் செய்த காரியம்! யாழில் சம்பவம்

PARIS TAMIL  PARIS TAMIL
உதவி செய்வதாக நடித்து முதாடிக்கு பெண் செய்த காரியம்! யாழில் சம்பவம்

மருத்துவமனை விடுதியிலிருந்து வெளியேறியமூதாட்டிக்கு உதவி செய்வது போல நடித்து அவர் அணிந்திருந்த ஒரு பவுண் நிறையுடைய தங்கத் தோடுகளை அபகரித்துச் சென்றுள்ளார் பெண்ணொருவர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்தச் சம்பவம் நேற்று யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது.
 
கடந்த மூன்று தினங்களாக சுகயீனமாக விடுதியில் தங்கி சிகிச்சை பெற்ற  80 வயது மூதாட்டி விடுவிக்கப்பட்டார். விடுதி மருத்துவர் மருந்துச் சிட்டை எழுதிக் கொடுத்துள்ளார்.
 
மூதாட்டி விடுதிக்கு வெளியே வந்து அங்கிருந்த பெண்ணொருவரிடம் வெளி நோயாளர் பிரிவு மருந்தகத்தில் மருந்து வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.
 
அந்தப் பெண்ணும் சிட்டையை வாங்கிச் சென்று மருந்துகளை வாங்கிக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு காதில் தொங்கும் நிலையில் காணப்பட்ட இரு தோடுகளும் வீழ்ந்து விடப்போகிறது. அதற்கு வாசர் வாங்கிக் கொண்டு வந்து தருவதாகக் கூறி தோடுகளை கேட்டுள்ளார்.
 
விடுதியில் உதவியாளராக இருக்கும் ஒருவர் என நினைத்து மூதாட்டி தோடுகளை கழற்றிக் கொடுத்துள்ளார். தோடுகளுடன் போனவர் நீண்ட நேரமாக வராததால் விடுதிப் பொறுப்பாளரிடம் முறையிட்டார்.
 
இது தொடர்பாக மருத்துவமனை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மூதாட்டியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
 
இரு மாதங்களுக்கு முன்னர் விடுதியில் தங்கியிருந்த ஒரு மூதாட்டிக்கு உதவுவதுபோல நடித்த பெண் எக்ஸ் றே எடுக்கச் செல்ல நகைகளை கழற்ற வேண்டும் எனக் கூறி அவற்றை பாதுகாப்பாக வைத்திருப்பதாகக் கூறி நகைகளுடன் தலைமறைவான சம்பவம் இதே விடுதியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை