ஆலன் போர்டர் விருதை வென்றார் ஸ்டீவ் ஸ்மித்!

PARIS TAMIL  PARIS TAMIL
ஆலன் போர்டர் விருதை வென்றார் ஸ்டீவ் ஸ்மித்!

சிறந்த கிரிக்கட் வீரருக்காக அவுஸ்ரேலிய கிரிக்கட் சபையால் வழங்கப்படுகின்ற ஆலன் போர்டர் விருதினை இரண்டாவது முறையாகவும் ஸ்டீவ் ஸ்மித் வென்றுள்ளார்.
 
மெல்பேர்னில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் ஸ்டீவ் ஸ்மித் இந்த விருதினை வென்றுள்ளார். இதன்போது இந்தியா, நியூஸிலாந்து மற்றும் ஆஷஸ் தொடரில் சிறப்பாக செயற்பட்ட ஸ்டீவ் ஸ்மித் தலைசிறந்த டெஸ்ட் வீரர் விருதையும் வென்றார். இவ்விருதுக்காக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் நாதன் லயன் ஆகியோருக்கு இடையில் கடுமையான போட்டி நிலவிய போதிலும் ஆறு வாக்குகள் அதிகம் பெற்று ஸ்டீவ் ஸ்மித் விருதை வென்றார்.
 
அதேவேளை ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர் விருதை டேவிட் வோர்னரும் சிறந்த ரி-ருவென்ரி வீரருக்கான விருதை ஆரோன் பிஞ்ச் ஆகியோரும் வென்றனர்.
 
ஒருநாள் போட்டி சிறந்த வீரர் விருதுக்காக டேவிட் வோர்னர், சகலதுறை ஆட்டவீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் போட்டியிட்ட போதிலும் இறுதியில் டேவிட் வோர்னரே தெரிவு செய்யப்பட்டார்.
 
அதேவேளை ரி-ருவென்ரி வீரருக்கான விருதினை ஒரு வாக்கு வித்தியாசத்தில் பிஞ்ச் தட்டிச் சென்றார். ரி-ருவென்ரி வீரர் விருதினை இரண்டாவது முறையாக பிஞ்ச் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை