``வரலாறு படைக்குமா இந்திய அணி?’’ - ஃபீல்டிங் தேர்வு செய்தது தென்னாப்பிரிக்கா!

விகடன்  விகடன்
``வரலாறு படைக்குமா இந்திய அணி?’’  ஃபீல்டிங் தேர்வு செய்தது தென்னாப்பிரிக்கா!

போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடக்கும் இந்திய அணிக்கெதிரான 5-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது.

Photo: Twitter/ICC


தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா, 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த விராட் படை, ஒருநாள் தொடரின் முதல் 4 போட்டிகளில் மூன்றை வென்று 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்காவின் கேப்டன் மார்க்ரம் ஃபீல்டிங் தேர்வு செய்தார். கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் இந்தியா களமிறங்கியுள்ளது.  

போர்ட் எலிசபெத் மைதானத்தைப் பொறுத்தவரை இந்தியா இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலுமே தோல்வியையே சந்தித்திருக்கிறது. அதேபோல், இந்த மைதானத்தில் 200 ரன்களை ஒரு முறை கூட எட்டியதில்லை. இன்றைய போட்டியில் வெல்லும்பட்சத்தில் போர்ட் எலிசபெத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்வதுடன், தொடரையும் வென்று சாதிக்கலாம் விராட் கோலி படை. 

மூலக்கதை