பணக்காரர் முதல்வர் சந்திரபாபு

தினமலர்  தினமலர்
பணக்காரர் முதல்வர் சந்திரபாபு

புதுடில்லி:ஜனநாயக மறுமலர்ச்சி சங்கம் என்ற அமைப்பு, வெளியிட்டுள்ள அறிக்கையில்ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு 177 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், நாட்டின் பணக்கார முதல்வர் என்ற அந்தஸ்தை, அவர் பெற்று உள்ளார்.திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார், ஏழை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த இவரது சொத்து மதிப்பு, 27 லட்ச ரூபாய் என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஏழை முதல்வர் பட்டியலில் ஐந்து பேர், பா.ஜ.,வை சேர்ந்தவர்கள்.

மூலக்கதை