இந்தியாவில் உள்ள ஒரே ஆர்ச் டேமுக்கு இன்று பிறந்த நாள்!

விகடன்  விகடன்
இந்தியாவில் உள்ள ஒரே ஆர்ச் டேமுக்கு இன்று பிறந்த நாள்!

சியாவின் மிகப்பெரிய ஆர்ச் அணையான இடுக்கி அணைக்கட்டு கட்டப்பட்டு இன்றுடன் 42 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தியாவின் ஒரே 'ஆர்ச் டேம்' இடுக்கி அணைக்கட்டுதான். பெரியாறு நதியின் குறுக்கே குறவன், குறத்தி என்ற இரு மலை இடுக்கில் ஆற்றைத் தடுத்துக்  கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான அணைக்கட்டு இது. 'வி' வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த அணைக்கட்டுதான் கேரளாவிலும் மிகப்பெரியது. 169 மீட்டர் உயரம் கொண்ட இந்த அணையைக் கட்டும் பணி  1969-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 

கடந்த 1973-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அணையைத் திறந்து வைத்தார். கேரள மின்வாரியத்துறை பராமரிப்பில் உள்ள இந்த அணையில் இருந்து, நாள் ஒன்றுக்கு 780 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். கேரளாவின் மிகப்பெரிய நீர் மின் நிலையமாக இந்த அணைக்கட்டுச் செயல்படுகிறது. 1975- ம் ஆண்டு முதல் இங்கு மின் உற்பத்தி நடந்து வருகிறது. இந்த அணை திறக்கப்பட்டால், கரையோர மக்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு விடுவார்கள். 

அணையைக் கட்டும் பணியில் ஈடுபட்ட கூலித் தொழிலாளர்களுக்கு தினம் இரண்டு ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. கட்டுமானப்பணியில் ஈடுபட்டவர்களில் 85 பேர் பல்வேறு விபத்துகளில் சிக்கி பலியாகியிருக்கின்றனர்.  இந்துஸ்தான் நிறுவனம்  இந்த பிரமாண்ட அணையைக் கட்டியது. முல்லைப் பெரியாறு அணையைவிட பல மடங்கு பெரியது இடுக்கி அணை. 
 

மூலக்கதை