தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு அபராதம்!

PARIS TAMIL  PARIS TAMIL
தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு அபராதம்!

ஜோகன்ஸ்பர்க்கில் நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில், மெதுவாக பந்து வீசியதற்காக தென் ஆப்பிரிக்க அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 
இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய நான்காவது ஒருநாள் போட்டி, ஜோகன்ஸ்பர்க்கில் நடைபெற்றது. இந்த போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது.
 
தென் ஆப்பிரிக்க அணியில் மோர்னே மோர்கல், ரபாடா, கிறிஸ் மோரிஸ், நிகிடி, பெலுக்வாயோ ஆகிய ஐந்து வீரர்களும் இணைந்து 46 ஓவர்களும், சுழற்பந்து வீச்சாளர் டுமினி 4 ஓவர்களும் வீசினர்.
 
எனினும், தென் ஆப்பிரிக்க அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை. இதனால், ஒரு ஓவர் குறைவாக வீசியதாக போட்டி நடுவர் தெரிவித்தார்.
 
இதன் காரணமாக, தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் மார்கிராமிற்கு போட்டி சம்பளத்திலிருந்து 20 சதவிகிதமும், மற்ற வீரர்களுக்கு 10 சதவிகிதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
 

மூலக்கதை