சி.ஆர்.பி.எஃப் முகாமில் தாக்குதல்நடத்த வந்த தீவிரவாதிகள் விரட்டியடிப்பு -காஷ்மீரில் தொடரும் பதற்றம்!

விகடன்  விகடன்
சி.ஆர்.பி.எஃப் முகாமில் தாக்குதல்நடத்த வந்த தீவிரவாதிகள் விரட்டியடிப்பு காஷ்மீரில் தொடரும் பதற்றம்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், கையில் துப்பாக்கியுடன் வந்த இரண்டு தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் விரட்டியடிக்கப்பட்டனர். 

காஷ்மீர் மாநிலம், கடந்த சில மாதங்களாகவே தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதல்களால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன், காஷ்மீரின் சஞ்வான் ராணுவ முகாமிற்குள் நுழைந்த தீவிரவாதிகள், கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 5 ராணுவ வீரர்களைப் பலிவாங்கிய இந்தத் தாக்குதல் பற்றிய செய்திகள் முடிவடைவதற்குள், தற்போது மேலும் ஒரு தாக்குதலுக்குத் தீவிரவாதிகள் தயாராக வந்துள்ளனர். 

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் முகாமை நோக்கி, கையில் ஏ.கே 47 ரக துப்பாக்கியுடனும் தோளில் பையுடனும் இரண்டு தீவிரவாதிகள் வந்துள்ளனர். அவர்கள்மீது பாதுகாப்புப் படையிடனர் தாக்குதல் நடத்தினர். இதனால், அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். தற்போது, பாதுகாப்புப் படையினர் அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து நடக்கும் தீவிரவாதிகளின் தாக்குதல்களால், காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது, எல்லைப் பகுதியில் இருக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை