காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்

தினமலர்  தினமலர்
காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்

நாமக்கல்: புதிய டெண்டர் நடைமுறைகளை கைவிட வலியுறுத்தி இன்று (பிப்., 12)முதல் காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரின் வேலை நிறுத்த போராட்டம் துவங்கியது.
இது குறித்து கூறப்படுவதாவது: இந்தியா முழுவதும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருறுந்து சமையல் காஸை சிலிண்டரில் நிரப்பும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில், தென்மாநிலங்களை சேர்ந்த 4,200 காஸ் டேங்கர் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான வாடகை டெண்டரை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகிறது. இது வரையில் மண்டல அளவில் நடத்த பட்டு வந்த டெண்டர் முறையை மாற்றி தற்போது ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி டெண்டர் என்ற புதியமுறையை அறிவித்தன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் மண்டல வாரியாக டெண்டர் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று முதல் தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களில்வேலை நிறுத்தம்நடைபெற உள்ளது என காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னம்பலம், செயலாளர் கார்த்தி ஆகியோர் கூறி உள்ளனர்.

பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை



போராட்டம் குறித்து ஐ.ஓ.சி மக்கள் தொடர்பு அதிகாரி சபீதா நட்ராஜ் கூறுகையில்: வேலை நிறுத்த அறிவிப்பு ஏற்கனவே வெளியிட்ட நிலையில் போராட்டம் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் தரப்பில் பேச்சு வார்த்தை நடக்கும் எனவும் , இதனால் உடனடியாக பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லைஎனவும் கூறினார்.

மூலக்கதை