தமிழ் படத்தில் நடிக்க சன்னி லியோனுக்கு எதிர்ப்பு

PARIS TAMIL  PARIS TAMIL
தமிழ் படத்தில் நடிக்க சன்னி லியோனுக்கு எதிர்ப்பு

 கனடா நாட்டைச் சேர்ந்த பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். தற்போது ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார். வீரமாதேவி என்ற தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், படத்தில் நடிக்க சன்னி லியோனுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் இனோச் மோசஸ், நசரத்பேட்டை காவல் நிலையத்திலும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

 
பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் இடத்தில் வீரமாதேவி என்ற படத்தின் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இந்தப் படத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிக்க இருக்கிறார். இணையதளத்தில் காணக் கிடைக்கும் சன்னி லியோன் நடித்த ஆபாச படங்கள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மனதை கெடுக்கும் வகையில் உள்ளது. அவர் நடிக்கும் வீரமாதேவி என்ற படம் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படம் என்று கூறப்படுகிறது. குறிப்பிட்ட இடத்தில் படப்பிடிப்பு நடந்தால் அவரை பார்க்க அதிக அளவில் இளைஞர்கள் கூடுவார்கள். எனவே இந்த படப்பிடிப்பில் சன்னி லியோன் கலந்து கொள்ள தடை விதிக்க வேண்டும்.
 
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
 

மூலக்கதை