மேற்கு ஆப்பிரிக்க கடலில் 22 இந்தியர்களுடன் மாயமான கப்பலை தேடும் பணி தீவிரம்: அமைச்சர் சுஷ்மா தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மேற்கு ஆப்பிரிக்க கடலில் 22 இந்தியர்களுடன் மாயமான கப்பலை தேடும் பணி தீவிரம்: அமைச்சர் சுஷ்மா தகவல்

புதுடெல்லி: மேற்கு ஆப்பிரிக்க கடலில், 22 இந்தியர்களுடன் மாயமான கப்பலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். பெட்ரோல் டேங்கர் ஏற்றி சென்ற தனியார் நிறுவன கப்பல் ஒன்று, கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பெனின் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

22 இந்தியர்கள் அந்த கப்பலில் இருந்த நிலையில், திடீரென கப்பல் மாயமானது. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் கப்பலின் கதி என்ன ஆனது என தெரியவில்லை.

மாயமான கப்பல் எங்கிருக்கிறது என்ற தகவல் இதுவரை தெரியவில்லை.    

பெட்ரோலை கொள்ளையடிப்பதற்காக இந்த கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மாயமான கப்பல் நைஜீரிய நாட்டு கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வருவதால், அந்நாட்டு அரசை தொடர்பு கொண்டு கப்பலை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு இந்தியா கேட்டுக்கொண்டது.

தற்போது கப்பலை தேடும் பணியில் நைஜீரிய கடற்படை ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், ‘‘22 இந்தியர்களுடன் மாயமான கப்பலை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் குறித்து நைஜீரிய நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேசினேன்.

கப்பலை மீட்கும், தேடும் நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகளை செய்வதாக அவர் தெரிவித்தார்.

கப்பலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது’’ என்றார்.  

.

மூலக்கதை