பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு: காஷ்மீர் எல்லையில் பள்ளிகள் மூடல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு: காஷ்மீர் எல்லையில் பள்ளிகள் மூடல்

ரஜோரி: காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்ட எல்லை பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நேற்று இரவு துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். இதுமட்டுமின்றி எல்லையோர கிராமங்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்துவதால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரஜோரி பகுதியில் உள்ள 84 பள்ளிகள் மூடப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். சமீபகாலமாக பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் அதிகரித்துள்ளதால், எல்லையோர கிராம மக்கள் பலியாகி வருகின்றனர்.

பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலால் பள்ளிகள் அடிக்கடி மூடப்படுவதால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எல்லையோர கிராமங்களை சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு அங்குள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.


.

மூலக்கதை