10 கோடி குடும்பங்கள் பயன்பெறும் தேசிய சுகாதார திட்டம் மாநில அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்: நிதி ஆயோக் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
10 கோடி குடும்பங்கள் பயன்பெறும் தேசிய சுகாதார திட்டம் மாநில அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்: நிதி ஆயோக் தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் 10 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையிலான தேசிய சுகாதார திட்டம், மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட உள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், நாடு முழுவதும் 10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

சுமார் 50 கோடி பேர் பயனடையும் வகையிலான இந்த தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் ஒவ்வொருவரும் ரூ. 5 லட்சம் வரை காப்பீடு பெறமுடியும்.

மிகப்பெரிய அளவிலான இந்த திட்டத்தை செயல்படுத்த அதிக நிதி தேவைப்படும் என்றும், அதை எவ்வாறு மத்திய அரசு ஒதுக்கும் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இந்நிலையில், அரசு திட்டங்களை வரைமுறைபடுத்தும் அமைப்பான நிதி ஆயோக் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

இத்திட்டம் மருத்துவதுறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், இதை செயல்படுத்த நிதி தடையாக இருக்காது என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு ரூ. 2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்துக்கு வரிதிரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

 சுகாதார வரி மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ. 11 ஆயிரம் கோடி கிடைக்கும்.

இந்த தொகையும் தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு பயன்படுத்தப்படும். இதுமட்டுமின்றி, மாநில அரசு பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மாநில அரசு இதற்கான நிதி ஒதுக்கும் பட்சத்தில் இந்த காப்பீடு திட்டம் சிறந்த முறையில் செயல்படுத்தப்படும் என நிதி ஆயோக் விளக்கம் அளித்துள்ளது.


.

மூலக்கதை