சான்றிதழ்களை வீடுகளில் நேரடியாக வழங்கும் திட்டம்: முதல்வர் கெஜ்ரிவால் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சான்றிதழ்களை வீடுகளில் நேரடியாக வழங்கும் திட்டம்: முதல்வர் கெஜ்ரிவால் தகவல்

புதுடெல்லி: சான்றிதழ்கள், ரேசன் பொருட்கள் உள்ளிட்டவற்றை வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிமுகப்படுத்தியுள்ளார். இன்னும் 2 மாதங்களுக்குள் இத்திட்டம் தொடர்பான விவரங்களை அறிய இலவச தொலைபேசி எண்கள் செயல்பாட்டுக்கு வரும் என கூறியுள்ளார்.

நேரத்தை மிச்சப்படுத்தவும், மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையிலும், சான்றிதழ்கள், ரேசன் பொருட்கள், முதியவர்களுக்கான ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை நேரடியாக வீடுகளுக்கு வழங்கும் திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொண்டுவந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: வீடுகளுக்கே சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்துக்கான தொலைபேசி உதவி எண்கள் இன்னும் 2 மாதங்களில் செயல்படும்.

அத்தியாவசிய சான்றிதழ் பெற நினைக்கும் நபர் இந்த தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். ஓய்வூதியம் பெறும் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை வீடுகளுக்கு நேரில் என்று அளிக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் வரிசையில் நிற்பது தவிர்க்கபப்டும்.

இத்திட்டத்துக்காக வீடுகளுக்கே அரசு ஊழியர்கள் வந்து பயோமெட்ரிக் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க உள்ளனர்.

 சான்றிதழ்கள், ரேசன் பொருட்கள், பென்சன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நலத்திட்டங்கள் நேரடியாக வீடுகளை வந்தடையும். திட்டங்களுக்கான செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கடந்த 3 வருடங்களாக டெல்லியில் மின்கட்டணத்தை உயர்த்தவில்லை. ஒவ்வொரு வீட்டிற்கும் 20 ஆயிரம் லிட்டர் குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

319 காலனிகளுக்கு குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கிடைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.  

.

மூலக்கதை