15 லட்சத்துக்கும் மேல் டெபாசிட் செய்த 2 லட்சம் பேருக்கு நோட்டீஸ்: வருமான வரித்துறை அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
15 லட்சத்துக்கும் மேல் டெபாசிட் செய்த 2 லட்சம் பேருக்கு நோட்டீஸ்: வருமான வரித்துறை அதிரடி

புதுடெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ரூ. 15 லட்சத்துக்கும் மேல் வங்கியில் டெபாசிட் செய்த 2 லட்சம் பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று பிரதமர் மோடி அறிவித்தார். மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தனர்.

பலர் கணக்கில் காட்டாத பணத்தை வங்கியில் செலுத்தினர். இந்நிலையில், ரூ. 15 லட்சத்துக்கும் மேல் செலுத்திய சுமார் 2 லட்சம் பேருக்கு  வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வங்கியில் டெபாசிட் செய்த பணத்துக்கு கணக்கு காட்டுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் இதுவரை அவர்கள் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை என வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய பதில் கூறவில்லை என்றால் சம்மந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரி செலுத்துவதில் தாமதம், வரி ஏய்ப்பு உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆன்லைன் மூலம் வரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வரி செலுத்துவது எளிமையாக்கப்பட்டுள்ளதாகவும், வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.    

.

மூலக்கதை