கேரளா, கர்நாடகா உள்பட 10 உயர் நீதிமன்றங்களுக்கு விரைவில் தலைமை நீதிபதிகள் நியமனம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரளா, கர்நாடகா உள்பட 10 உயர் நீதிமன்றங்களுக்கு விரைவில் தலைமை நீதிபதிகள் நியமனம்

புதுடெல்லி: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் விரைவில் பொறுப்பேற்க உள்ளனர். நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில், நீதிபதி உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக ஏராளமான வழக்குகள் தேங்கியுள்ளன. நீதிமன்றங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், டெல்லி, கொல்கத்தா, கேரளா, கர்நாடகா, சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம், திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம் ஆகிய 10 மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களுக்கான தலைமை நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.



நீதிபதிகளை நீதிபதிகளே நியமிக்கும் குழுவான கொலீஜியம் இந்த பரிந்துரையை செய்துள்ளது. இக்குழு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் இயங்குகிறது.

சமீபத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். குற்றச்சாட்டுகளை கூறிய நீதிபதிகள் கொலீஜியம் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த விவகாரம் காரணமாக, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை நியமிப்பதில் சற்று காலதாமதம் ஏற்பட்டது. தற்போது இப்பிரச்னை முடிவுக்கு வந்த நிலையில், கொலீஜியம் பரிந்துரை செய்த நீதிபதிகள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.


.

மூலக்கதை