பெங்களூருவில் ஐபிஎல் வீரர்கள் ஏலம் : தவானை 5.2 கோடிக்கு சன்ரைசர்ஸ் வாங்கியது : அஸ்வினை 7.6 கோடிக்கு பஞ்சாப் ஏலம் எடுத்தது

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெங்களூருவில் ஐபிஎல் வீரர்கள் ஏலம் : தவானை 5.2 கோடிக்கு சன்ரைசர்ஸ் வாங்கியது : அஸ்வினை 7.6 கோடிக்கு பஞ்சாப் ஏலம் எடுத்தது

பெங்களூரு : 11வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் பெங்களூரில் இன்று தொடங்கியது. 11வது ஐ. பி. எல்.

டி20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 7ம்தேதி முதல் மே 27ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் ஏப். 7ம்தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தபோட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது. இறுதி போட்டி இதே மைதானத்தில் மே 27ம் தேதி நடக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 2 ஆண்டு தடைக்கு பின்னர் இந்த சீசனில் களம் இறங்குகின்றன.

8 அணிகளின் சார்பில் 18 வீரர்கள் மட்டுமே தக்கவைக்கப்பட்டனர். எஞ்சிய வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள்.

ஐ. பி. எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கியது.

360 இந்திய வீரர்கள் உள்பட மொத்தம் 578 வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 18 வீரர்களும், அதிகபட்சமாக 25 வீரர்களும் இருக்க வேண்டும்.

ஏலத்தில் வீரர்களை வாங்குவதற்கு ஒவ்வொரு அணி நிர்வாகமும் ரூ. 80 கோடி வரை செலவு செய்யலாம். ஆனால் ஏற்கனவே தக்க வைத்துள்ள வீரர்களின் ஊதியம் இந்த ஒட்டுமொத்த தொகையில் இருந்து கழிக்கப்படும்.

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் டோனி (ரூ. 15 கோடி), சுரேஷ் ரெய்னா (11 கோடி), ரவீந்திர ஜடேஜா (ரூ. 7 கோடி) ஆகியோரை தக்க வைத்துள்ளதால் இவர்களின் தொகை ரூ. 33 கோடி போக எஞ்சியுள்ள ரூ. 47 கோடிக்கு மட்டுமே ஏலத்தில் வீரர்களை எடுக்க முடியும்.

சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு ரூ. 2 கோடி, ரூ. 1. 5 கோடி, ரூ. 1 கோடி 75 லட்சம், ரூ. 50 லட்சம் வீதமும், சர்வதேச போட்டிகளில் ஆடாத வீரர்களுக்கு ரூ. 40 லட்சம், ரூ. 30 லட்சம், ரூ. 20 லட்சம் என்ற வீதமும் அடிப்படை தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு நட்சத்திர ஓட்டலில் இன்று காலை தொடங்கிய ஐபிஎல் ஏலத்தில் முதல் வீரராக தவான் ஏலம் விடப்பட்டார்.

அவரை ரூ. 2 கோடி அடிப்படை விலையான அவரை ரூ. 5. 2 கோடிக்கு மேட்ச் கார்டு மூலம் சன்ரைசரஸ் ஐதராபாத் தக்க வைத்தது. அடுத்ததாக தமிழக வீரர் அஸ்வின் ஏலத்திற்கு வந்தார்.

ரூ. 2 கோடி அடிப்படை விலையான நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ. 7. 6 கோடிக்கு அவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஏலம் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் பொல்லார்ட்டை மும்பை இந்தியன்ஸ் 5. 4 கோடிக்கு மேட்ச் கார்டு மூலம் தக்க வைத்தது.

முதல் ரவுண்டில் அதிரடி வீரர் கிறிஸ் கெய்லை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. ரூ. 2 கோடியை அடிப்படை  விலையாக கொண்ட இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஸ்டோக்சை ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 12. 5 கோடிக்கும், 1. 5 கோடியை அடிப்படை விலையாக கொண்ட தென்ஆப்ரிக்காவின் டூ பிளசிசை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 1. 6 கோடிக்கும் மேட்ச் கார்டு முறையில் ஏலம் எடுத்தது.

ரஹானேவை மேட்ச் கார்டு  மூலம்  ரூ. 4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்சும், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்சை கேகேஆர் ரூ. 9. 4 கோடிக்கும் ஏலம் எடுத்தன.

.

மூலக்கதை