சுவிஸ் அதிபருடன் மோடி பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சுவிஸ் அதிபருடன் மோடி பேச்சு

டாவோஸ்: சுவிட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட்டை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தரப்புகள் உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

உலக பொருளாதார மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி 48-வது உலக பொருளாதார மாநாடு சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் 4 நாட்கள் நடக்கிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று  சுவிட்சர்லாந்து புறப்பட்டு சென்றார். அவருடன் மத்திய அமைச்சர்கள் சுரேஷ்பிரபு, பியூஸ்கோயல், தர்மேந்திரபிரதான், மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் தொழில் அதிபா–்கள் முகேஷ் அம்பானி, ஆசிம்பிரேம்ஜி, ராகுல்பஜாஜ் உள்ளிட்டவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

சுவிட்சர்லாந்து வந்த மோடியை அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோப்வென் நேரில் சென்று வரவேற்றார்.

அப்போது இந்திய தூதரக அதிகாரிகளும் உடன் இருந்தனர். இந்த மாநாட்டையொட்டி டாவோஸ் நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

உலக பொருளாதார மாநாட்டுக்கு இடையே,  பிரதமர் மோடி சுவிட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட் அவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது, இரு தரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை