அருண் ஜெட்லி அல்வா கிளறி பட்ஜெட் அச்சடிப்பை துவக்கினார்

தினமலர்  தினமலர்
அருண் ஜெட்லி அல்வா கிளறி பட்ஜெட் அச்சடிப்பை துவக்கினார்

புதுடில்லி, : வரும், 2018 -– 19ம் நிதி­யாண்டு மத்­திய பட்­ஜெட், பிப்., 1ல், பார்லி.,யில் தாக்­கல் செய்­யப்­ப­டு­கிறது. இதை­யொட்டி, பட்­ஜெட் ஆவ­ணங்­களை அச்­ச­டிக்­கும் பணி, நேற்று துவங்­கி­யது.டில்­லி­யில், ‘நார்த் பிளாக்’கில் உள்ள, நிதி­ய­மைச்­சக வளா­கத்­தில், நீண்ட கால வழக்­கப்­படி, மத்­திய நிதி­ய­மைச்­சர், அருண் ஜெட்லி, அல்வா கிளறி, பட்­ஜெட் ஆவண அச்­ச­டிப்பை துவக்கி வைத்­தார். இதை­ய­டுத்து, அனை­வ­ருக்­கும் சுவை­யான அல்வா வழங்­கப்­பட்­டது.இந்­நி­கழ்ச்­சி­யில், தலைமை பொரு­ளா­தார ஆலோ­ச­கர், அர­விந்த் சுப்­ர­ம­ணி­யன், பொரு­ளா­தார விவ­கா­ரங்­கள் துறை செய­லர், சுபாஷ் சந்­திர கர்க், நிதித் துறை இணை அமைச்­சர், சிவ் பிர­தாப் சுக்லா, நிதி அமைச்­சக அதி­கா­ரி­கள் உள்­ளிட்­டோர் பங்­கேற்­ற­னர்.பார்லி.,யில், மத்­திய பட்­ஜெட் தாக்­கல் செய்­யப்­படும் நாள் வரை, நிதி­ய­மைச்­ச­கத்­தின் ஒரு­சில மூத்த அதி­கா­ரி­கள் தவிர்த்து, இதர அதி­கா­ரி­கள், அச்­ச­கத்­தி­லேயே தங்­கி­யி­ருக்க வேண்­டும். பட்­ஜெட் தக­வல்­கள் கசி­வதை தடுக்க, இந்த நடை­முறை பின்­பற்­றப்­ப­டு­கிறது.

மூலக்கதை