அடுத்த 5 ஆண்டுகளில்... ‘டிஜிட்டல்’ கட்டமைப்பை மேம்படுத்தினால் பொருளாதார வளர்ச்சி 3 மடங்கு அதிகரிக்கும்

தினமலர்  தினமலர்
அடுத்த 5 ஆண்டுகளில்... ‘டிஜிட்டல்’ கட்டமைப்பை மேம்படுத்தினால் பொருளாதார வளர்ச்சி 3 மடங்கு அதிகரிக்கும்

நவி மும்பை, ஜன. 21–‘‘அடுத்த ஐந்து ஆண்­டு­களில், ‘டிஜிட்­டல்’ கட்­ட­மைப்பு வச­தி­கள், மூன்று மடங்கு உயர்ந்­தால், அதற்கு நிக­ராக, நாட்­டின் பொரு­ளா­தா­ர­மும் வளர்ச்சி காணும்,’’ என, மத்­திய தொலை தொடர்பு துறை செய­லர், அருணா சுந்­த­ர­ரா­ஜன் தெரி­வித்து உள்­ளார்.நவி மும்­பை­யில், ‘ஆர்­ஜியோ’ நிறு­வ­னத்­தின் தலைமை அலு­வ­ல­கம் அமைந்­துள்ள, ரிலை­யன்ஸ் கார்ப்­ப­ரேட் பூங்­கா­வில், ‘இந்­திய டிஜிட்­டல் மாநாடு’ நடை­பெற்­றது.இதில், அருணா சுந்­த­ர­ரா­ஜன் பேசி­ய­தா­வது:இது, ‘டிஜிட்­டல்’ எனப்­படும், மின்­னணு யுகம். மின்­னணு தொழில்­நுட்­பத்தை மைய­மாக வைத்து, அனைத்து வகை பயன்­பா­டு­களும் மாறி வரு­கின்றன. அதற்­கேற்ப, மின்­னணு தொழில்­நுட்­பத்­திற்­கான, உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்­து­வது கட்­டா­ய­மாகி உள்­ளது.இத்­த­கைய வச­தி­களை, அடுத்த ஐந்து ஆண்­டு­களில், மூன்று மடங்கு பெருக்க வேண்­டும். இதை இலக்­காக வைத்து செயல்­பட்­டால், இதே காலத்­தில், நாட்­டின் பொரு­ளா­தா­ர­மும், மூன்று மடங்கு உயர்ந்து, 750 லட்­சம் கோடி டால­ராக அதி­க­ரிக்­கும்.தனி­யார் துறை முத­லீ­டு­களை ஈர்க்­கும் நோக்­கில், மின்­னணு தொழில்­நுட்ப கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்­தும் முயற்­சி­யில், அரசு தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளது. அத்­து­டன், தக­வல் பாது­காப்பு மற்­றும் தக­வல் திருட்டை தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளை­யும் மேற்­கொண்டு வரு­கிறது.இது குறித்த விப­ரங்­கள், இந்­தாண்டு வெளி­யா­கும் தொலை தொடர்பு துறை­யின், புதிய கொள்­கை­யில் இடம் பெறும்.தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள், பரந்த மனப்­பான்­மை­யு­டன், ‘ஓபன் சோர்ஸ்’ முறையை பின்­பற்ற வேண்­டும். இத்­த­கைய முறை­யில் தான், ‘ஆதார்’ உள்­ளிட்ட திட்­டங்­களின் செய­லாக்­கம் நடக்­கிறது.பல­ருக்கு, மின்­னணு தொழில்­நுட்ப வச­தி­களை பயன்­ப­டுத்த தெரி­ய­வில்லை. இன்­னும் சிலர், இவ்­வ­ச­தியை முழு­மை­யாக பயன்­ப­டுத்­தா­மல் உள்­ள­னர்.இத்­த­கை­யோர் தான், மின்­னணு தொழில்­நுட்ப துறை­யின், தற்­போ­தைய வளர்ச்சி வாய்ப்­பிற்கு வித்­தி­டு­ப­வர்­க­ளாக உள்­ள­னர். மின்­னணு தொழில்­நுட்ப வச­தி­களை, அனைத்து மக்­களும் பயன்­ப­டுத்­தும் ­பட்­சத்­தில், சர்­வ­தேச மின்­னணு தொழில்­நுட்ப பயன்­பாட்­டின் தலைமை பீடம் என்ற சிறப்பை, இந்­தியா பெறும்.அதற்­கேற்ப, ஐந்­தாம் தலை­மு­றைக்­கான, ‘5ஜி’ தொலை தொடர்பு ஒருங்­கி­ணைப்பு வச­தி­களை உரு­வாக்­கு­வ­தில், மத்­தியஅரசு தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளது.தொலை தொடர்பு சேவை துறை­யில், புதி­தாக நுழைந்­துள்ள, ஆர்­ஜியோ நிறு­வ­னம், புது­மை­யான திட்­டங்­கள், சேவை­கள் போன்­ற­வற்­றின் மூலம், மின்­னணு தொழில்­நுட்ப வச­தியை, நன்கு பயன்­ப­டுத்­திக் கொண்­ட­து­டன்,ஆயி­ரக்­க­ணக்­கான வேலை­வாய்ப்­பு­க­ளை­யும் உரு­வாக்கி உள்­ளது.இவ்­வாறு அவர் பேசி­னார்.

பிரகாசமான எதிர்காலம்இந்­தி­யா­வில், ‘விர்ச்­சு­வல் ரிய­லிட்டி’ எனப்­படும், மெய்­நி­கர் காட்சி வடி­வம் போன்ற, வள­ரும் தொழில்­நுட்­பங்­க­ளுக்கு பிர­கா­ச­மான எதிர்­கா­லம் உள்­ளது. இப்­பி­ரி­வில், 50 சத­வீத வளர்ச்சி காண, ஆர்­ஜியோ திட்­ட­மிட்டு உள்­ளது. தற்­போது, 260 கோடி டால­ராக உள்ள, ‘கிள­வுட் கம்ப்­யூட்­டிங்’ எனப்­படும், மேகக் கணினி தொழில்­நுட்ப சந்தை மதிப்பு, 400 கோடி டால­ராக உய­ரும்.ஆகாஷ் அம்பானி தலைவர், செயல் திட்டப் பிரிவு, ‘ஆர்ஜியோ’

மூலக்கதை