டோலிவுட்டை திரும்பிப்பார்க்க வைத்த எஸ்.எஸ்.தமன்

தினமலர்  தினமலர்
டோலிவுட்டை திரும்பிப்பார்க்க வைத்த எஸ்.எஸ்.தமன்

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிசியாக இசையமைத்து வருபவர் எஸ்.எஸ்.தமன். அவரது பாடல்கள் என்றாலே அதிரடியாக இருக்கும். டெக்னாலஜிக்கு முக்கியத்துவம் கொடுப்பார். ஆனால் அப்படிப்பட்ட தமன் தற்போது தான் இசையமைத்துள்ள தோழி பிரேமா என்ற படத்தில் அமைந்துள்ள ஆறு பாடல்களையும் மெல்லிசையாகவே கொடுத்திருக்கிறார்.

வருண்தேஜ்- ராசிகண்ணா நடித்துள்ள இந்த படத்தின் பாடல்களுக்கு அவர் ராகத்தின் அடிப்படையில் இசையமைத்துள்ளார். அதோடு டெக்னாலஜிக்கு கூடுதல் முன்னுரிமை கொடுப்பதை குறைத்து விட்டு லைவ் இசைக்கருவிகளை அதிகமாக பயன்படுத்தியுள்ளார். அதன்காணமாக, இந்த படத்தில் உயிரோட்டமான மெலோடிப் பாடல்களை கொடுத்து டோலிவுட்டை திரும்பிப்பார்க்க வைத்திருக்கும் தமன், இந்த படம் தனக்கு பெரிய பிரேக்கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார்.

மூலக்கதை