பிரபாஸின் ஹிந்தி படத்தில் சர்ச்சை நடிகை

தினமலர்  தினமலர்
பிரபாஸின் ஹிந்தி படத்தில் சர்ச்சை நடிகை

பாகுபலி-2 படத்தை அடுத்து பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. பாகுபலி படத்தைப்போலவே இந்த படமும் இந்தியில் வெளியாகிறது. மேலும், பாகுபலிக்குப்பிறகு இந்தியில் பிரபாசுக்கென்று ஒரு மார்க்கெட் உருவாகி விட்டதால் சாஹோவைத் தொடர்ந்து ஒரு நேரடி இந்தி படத்தில் நடிக்கிறார் பிரபாஸ். அதற்கான கதை கேட்டு ஓகே பண்ணி வைத்திருக்கிறார்.

இந்த நிலையில், அந்த செய்தியை தனது டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார் சர்ச்சை நடிகை அர்ஷிகான். சூடான வேடங்களில் நடித்து வரும் இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அதிரடி கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியவர். இந்த அர்ஷிகான் தனது டுவிட்டரில், அடுத்தபடியாக பிரபாஸ் நடிக்கும் இந்தி படத்தில் நடிப்பதாகவும், அந்த படத்தில் தானும் நடிக்கயிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மூலக்கதை