புதிய பட்ஜெட் மசோதா தோல்வி: அரசியல் காழ்ப்புணர்ச்சி என்கிறார் டிரம்ப்

தினமலர்  தினமலர்
புதிய பட்ஜெட் மசோதா தோல்வி: அரசியல் காழ்ப்புணர்ச்சி என்கிறார் டிரம்ப்

வாஷிங்டன்:அமெரிக்காவில் புதிய பட்ஜெட்டைசெனட் சபை ஏற்றுக் கொள்ளாததால் அரசு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.பிப்ரவரி 16ம் தேதி வரை அரசு பணிகளை கவனிக்க நிதியளிக்கும் இந்த மசோதா நிறைவேறுவதற்கு தேவையான 60 ஓட்டுகளைப் செனட் சபையில் பெற இயலவில்லை. எல்லை பாதுகாப்பு மற்றும் கனவுகளுடன் புதிதாக அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பான தங்களது விருப்பத்துக்கு அரசு மதிப்பளிக்காததால் இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் தோற்கடித்தன.
அரசு செலவினங்களை சமாளிக்க அடுத்த மாதம் வரை நிதி அளிப்பதை நீட்டிக்கும் முடிவுக்கு பிரதிநிதிகள் சபையில் 230 வாக்குகள் ஆதரவாகவும் 197 வாக்குகள் எதிராகவும் பதிவானது. ஆனால், 100 உறுப்பினர்களை கொண்ட செனட் சபையில் 60 வாக்குகளை பெற்றாக வேண்டும் என்ற நிலையில் மசோதாவுக்கு எதிராக 50 வாக்குகளும் ஆதரவாக 49 வாக்குகளும் விழுந்ததால் அங்கு மசோதா தோல்வியை சந்தித்தது.
டிர்ம்ப் குற்றச்சாட்டு
புதிய பட்ஜெட் மசோதா தோல்வி குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், எதிர்கட்சிகளின் அரசியல் காழ்ப்புணர்ச்சியே என்றார்.

மூலக்கதை