தமன்னாவை கரம் பிடிக்கிறார் செளந்தரராஜா

தினமலர்  தினமலர்
தமன்னாவை கரம் பிடிக்கிறார் செளந்தரராஜா

தமிழில் வளர்ந்து வரும் நடிகர் செளந்தரராஜா. சுந்தரபாண்டியன், தர்மதுரை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் ஹீரோவாகவும் நடிக்கிறார். நடிப்பில் மட்டுமல்லாது சமூக சேவையிலும் ஆர்வம் மிக்கவர். இவருக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது.

கிரீன் ஆப்பிள் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருக்கும் தமன்னாவுக்கும், செளந்தரராஜாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்தது. மே மாதம், மதுரை, உசிலம்பட்டியில் திருமணம் நடக்கிறது.

மூலக்கதை