நவீன நீர்வழிச் சாலை திட்டம்:ஏ.சி.காமராஜ் வலியுறுத்தல்

தினமலர்  தினமலர்
நவீன நீர்வழிச் சாலை திட்டம்:ஏ.சி.காமராஜ் வலியுறுத்தல்

மதுரை;''நவீன நீர்வழிச் சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,'' என மத்திய அரசின் நதிகள் இணைப்பு உயர்மட்டக் குழு உறுப்பினர் பொறியாளர் ஏ.சி.காமராஜ் வலியுறுத்தினார்.நவீன நீர்வழிச்சாலை திட்ட விழிப்புணர்வு கூட்டம்மதுரையில் நடந்தது. மாவட்டத் தலைவர் முருகப்பன் தலைமை வகித்தார். நிர்வாகி மார்ஷல் முருகன் வரவேற்றார்.ஏ.சி.காமராஜ் பேசியதாவது:
நம்மிடம்தேவைக்கு அதிகமாக 10 மடங்கு தண்ணீர் உள்ளது. ஆனால் நாட்டில்ஒருபுறம் வெள்ளம், மறுபுறம் வறட்சி நிலவுகிறது. மழை நீர் வீணாக கடலில் கலக்கிறது. தமிழகத்தில் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர்.நதி நீர் இணைப்புத் திட்டத்தை ஆந்திரா, கர்நாடகா, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்கள் ஏற்கவில்லை. நவீன நீர்வழிச்சாலை திட்டத்தை தமிழகம், ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்கள் ஏற்பதாக கூறுகின்றன. இத்திட்டத்தால் தண்ணீர் எங்கு இருந்தாலும், அதை எடுத்து தேவையான மாநிலங்களுக்கு வழங்க முடியும். இதனால் தடையின்றி குடிநீர் கிடைக்கும். கூடுதலான நிலம் பாசன வசதி பெறும். மின்உற்பத்தி, வேலைவாய்ப்பு பெருகும். திட்டத்தை மறைந்தமுன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பாராட்டினார். திட்டத்தைசெயல்படுத்த அரசு முன்வர வேண்டும், என்றார்.
மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் செல்லத்துரை பேசியதாவது:மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காகத் தான் வரும். நவீன நீர்வழிச்சாலை திட்டத்தால் நீர் மற்றும் மின்மிகை தேசமாக இந்தியா மாறும். உவர்ப்பு நீர்நல்ல நீராக மாறும். மருத்துவமனைகள், போலீஸ் ஸ்டேஷன்கள், சிறைச்சாலைகளின்எண்ணிக்கை குறையும். கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அணைகளின்எண்ணிக்கை பெருகும். ஜாதிச் சண்டைகள் குறையும். அப்துல்கலாம் கூறியதுபோல்இந்தியா வல்லரசாக மாறும், என்றார்.காமராஜ் எழுதிய 'திருக்குறள் காட்டும் நமது நாகரிகம்' புத்தகம் வெளியிடப்பட்டது.வருமான வரித்துறை இணை கமிஷனர் (ஓய்வு) மோகன் காந்தி, பேராசிரியை லட்சுமி பங்கேற்றனர்.

மூலக்கதை