'பாகுபலி' அளவு பெயர் வாங்குமா 'பாகமதி' ?

தினமலர்  தினமலர்
பாகுபலி அளவு பெயர் வாங்குமா பாகமதி ?

அனுஷ்கா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'பாகமதி' படம் அடுத்த வாரம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் அனுஷ்கா நடித்தால் மட்டுமே சரியாக இருக்கும் என்பதற்காக படக்குழுவினர் அவர் 'பாகுபலி' படத்தை முடித்துவிட்டு வரும் வரை காத்திருந்தனர்.

படத்தின் டிரைலரைப் பார்த்து எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்று யூகிக்க முடியவில்லை என்றாலும் பேயும், உளவியலும் சம்பந்தப்பட்ட கதையாக இருக்கம் என்று ஓரளவிற்குப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் படத்திற்காக அனுஷ்கா கஷ்டப்பட்டு அவருடைய உடல் எடையைக் குறைத்துள்ளார்.

'பாகுபலி' இரண்டு பாகங்களின் அளவிற்கு இந்தப் படம் வசூலைப் பெற கண்டிப்பாக வாய்ப்பில்லை. அதே சமயம், அந்த அளவிற்கு பெயர் வாங்கினாலே படத்திற்குப் பெரிய விஷயம். 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு அனுஷ்கா நடித்து வெளிவரும் படம் என்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.

மூலக்கதை