ஆசிய அபிவிருத்தி வங்கியின் 1900 மில்லியன் நிதியில் கல்முனை மாநகரம் அபிவிருத்தி…

TAMIL CNN  TAMIL CNN
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 1900 மில்லியன் நிதியில் கல்முனை மாநகரம் அபிவிருத்தி…

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 1900 மில்லியன் நிதியில் கல்முனை மாநகரம் அபிவிருத்தி செய்யப்படும் என விளையாட்டுத்துறை  பிரதி அமைச்சரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம்  காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். இச்செயற்திட்டம் சம்பந்தமாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (19) வெள்ளிக்கிழமை விளையாட்டுத்துறைபிரதி  அமைச்சரும்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில்  கல்முனைமாநகர  சபை கேட்போர்  கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விளக்கமளிக்கையில், இலங்கையிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் கல்முனை மாநகர சபை பல்வேறு வகையில் முக்கியத்துவ மிக்க பிரதேசமாகதிகழ்கின்றது.  இந்த நல்லாட்சி அரசு மலர்வதற்கு அதிகூடிய பங்களிப்பு வழங்கிய பிரதேசங்களில் ஒன்றாகவும் இம்மாநகரசபைப் பிரதேசம்  அடையாளப் படுத்தப்படுகின்றது. அழகிய ஓர் திட்டத்தின் அடிப்படையில் கல்முனை மாநகர் அபிவிருத்தி செய்யப்படும். ,சாய்ந்தமருது, மருதமுனை,நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, மற்றும் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து பிரதேசங்களும் நவீன ரீதியாகவரலாறு காணாத வகையில் அபிவிருத்தி செய்யப்டும். இவ் அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் அடுத்த 2020 ஜனவரிக்குமுன் ஓர் புதுப்பொலிவுடன் கல்முனை நகர் அபிவிருத்தி அடையும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இலங்கையில் பல அபிவிருத்தி திட்டங்கள் ஆசிய அபிவிருத்தி வங்கி  ஊடாக மேற்கொள்ளப்பட்டது. நகர திடடமிடல் மற்றும்நீர்வழங்கல் அமைச்சின் மூலம் பேராசிரியர் மாகநாம தலைமையில் ஓர் குழு  கல்முனை-சாம்மாந்துறை ஒருங்கிணைந்தஅபிவிருத்தி திட்டம்  தொடர்பான ஆய்வை மேற்கொண்டது.. குறிப்பாக கண்டி திருக்கோணமலை பெரும் நகரங்கள் பாரியஅபிவிருத்தி செய்ய  உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சின் மூலம் உள்வாங்கப்பட்டது. இதில் கல்முனை நகரம்உள்வாங்கப்பட வேண்டும் என உள்ளுராட்சி மாகாண அமைச்சிடம் ஓர் கோரிக்கை விடுத்தேன். நாட்டிலுள்ள ஒவ்வொரு நகரும் தெரிவு செய்யப்பட்டு உள்ளுராட்சி அமைச்சினால் அபிவிருத்தி திட்டங்கள்மேற்க்கொள்ளப்படவுள்ளது. அதில் கிழக்கு மாகாணத்தில் 3 நகரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.. இதற்காக ரூபா 1900மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. “இரண்டாம் நிலை நகரங்களின் அபிவிருத்தி திட்டம்” மூலம் 25 உள்ளூராட்சி மன்றங்களில் அம்பாறை மாவட்டத்திலிருந்துதெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு மாநகர சபையாக கல்முனை மாநகர_சபை திகழ்கின்றது. இது கூடிய சனத்தொகை செறிவு The post ஆசிய அபிவிருத்தி வங்கியின் 1900 மில்லியன் நிதியில் கல்முனை மாநகரம் அபிவிருத்தி… appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை