7 வருடத்திற்கு பிறகு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது - அமைச்சர் விளக்கம்

PARIS TAMIL  PARIS TAMIL
7 வருடத்திற்கு பிறகு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது  அமைச்சர் விளக்கம்

தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று திடீரென்று அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.  இந்த கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சரியான சில்லரை மட்டும் எடுத்துக்கொண்டு பஸ் நிலையங்களுக்குச் சென்ற கூலித் தொழிலாளர்கள், டிக்கெட் விலை உயர்வைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில்  போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியார்களிடம் கூறியதாவது:

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிதிச்சுமை அதிகரித்துள்ளது.  நிதிச்சுமை காரணமாகவே பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை. இந்தியாவிலேயே மிகக்குறைவான பேருந்து கட்டணம் உள்ள மாநிலம் தமிழகம்.

பேருந்து கட்டண உயர்வை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். பேருந்து கட்டணத்தை உயர்த்திய பிறகும், போக்குவரத்துத் துறைக்கு ஆண்டுக்கு ரூ.900 கோடி நஷ்டம்.

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  சென்னையில் 200 மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உள்ளாட்சி தேர்தல் உள்பட எந்த தேர்தல் வந்தாலும், அதனை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு அதிகப்படியான ஊதிய உயர்வு அளித்துள்ளோம்.

 போக்குவரத்துத் துறையை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை.  7 வருடத்திற்கு பிறகு, தற்போது தான் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்து கட்டண உயர்வு தொடர்பான, அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துக்கள் பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை