அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்திலும் அங்கீகாரம் பெற்று வரும் பொங்கல் பண்டிகை !!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்திலும் அங்கீகாரம் பெற்று வரும் பொங்கல் பண்டிகை !!

அமெரிக்காவின்  முதல் மாகாணமாக வெர்ஜினியா மாகனத்தில் இவ்வாண்டு முதல் சனவரி 14, பொங்கல் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது . இதைத் தொடர்ந்து பல்வேறு மாகாணங்கள் தங்கள் மாகாண கவர்னரின் பொங்கலுக்கான  சிறப்பு வாழ்த்தைப் பெற்று பொங்கலை மிகச்சிறப்பாக கொண்டாடிவருகிறார்கள் .

இந்த வகையில் ஜார்ஜியா , மேரிலாந்து ஆகிய இரு மாகானங்களும் இவ்வாண்டு கவர்னரின்  சிறப்பு வாழ்த்தினைப் பெற்று பொங்கலை கொண்டாடுகிறார்கள் ..   இவ்விரு மாகானங்களும் , மேலும் பல மாகாணங்களும் அடுத்த ஆண்டு வெர்ஜினியாவைப் போன்று சனவரி 14, பொங்கல் பண்டிகைக்கு அந்தந்த மாகாண அரசின் அங்கீகாரங்களைப் பெறுவார்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது .

இதில் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் வெர்ஜினியாவில் நிரந்தர அங்கீகாரமும், மேரிலாந்தில் அதற்கான முன்னெடுப்பும் எடுத்திருப்பது தமிழர்களுக்கு பெருமை தரும் விடயமாகும். வெர்ஜினியாவில் இதை செய்து முடித்த வள்ளுவன் தமிழ் மையம் , மேரிலாந்தில் இதற்கு முயற்சி மேற்கொண்டுவரும் திரு.ராஜன் நடராஜன் ஆகியோர் பாராட்டுக்குறியவர்கள்..

மூலக்கதை