22,834 கார்களை திரும்ப பெறுகிறது ஹோண்டா

தினமலர்  தினமலர்
22,834 கார்களை திரும்ப பெறுகிறது ஹோண்டா

புதுடில்லி : ஹோண்டா கார்ஸ் இந்­தியா நிறு­வ­னம், காற்­றுப் பை கோளாறு கார­ண­மாக, 22,834 கார்­களை திரும்­பப் பெறு­வ­தாக அறி­வித்­துள்­ளது.

இதன்­படி, 2013ல் விற்­பனை செய்­யப்­பட்ட, ‘அகார்டு, சிட்டி, ஜாஸ்’ மாடல் கார்­கள் திரும்­பப் பெறப்­பட்டு, புதிய காற்­றுப் பைகள் பொருத்தி தரப்­பட உள்ளன. இதில், 22,084 கார்­கள், ‘சிட்டி’ மாடல் ஆகும். ‘நாடு முழு­வ­தும் உள்ள முக­வர்­கள் மூலம், கார்­களில், புதிய காற்­றுப் பைகள் இல­வ­ச­மாக பொருத்தி தரப்­படும்’ என, ஹோண்டா தெரி­வித்­துள்­ளது.

ஜப்­பா­னைச் சேர்ந்த, டகாடா கார்ப்­ப­ரே­ஷன் நிறு­வ­னம், ஹோண்டா கார்­க­ளுக்கு காற்­றுப் பைகளை தயா­ரித்து அளித்­துள்­ளது. இவை, விபத்­தின் போது தன்­னிச்­சை­யாக விரி­வ­டைந்து, பய­ணி­யரை பாதிப்­பில் இருந்து காக்க உத­வு­கின்றன. டகா­டா­வின் காற்­றுப் பைகள், விரி­வ­டை­வ­தில் பிரச்னை ஏற்­பட்­ட­தால், உலக அள­வில் விற்­பனை செய்த கார்­களை, ஹோண்டா திரும்­பப் பெற்று, புதிய காற்­றுப் பை பொருத்தி தரு­கிறது.

இந்­தி­யா­வில், இத்­து­டன் கோளாறு கார­ண­மாக, புதிய காற்­றுப் பை பொருத்தி தரப்­படும் கார்­கள் எண்­ணிக்கை, 3.13 லட்­ச­மாக உயர்ந்­து உள்­ளது.

மூலக்கதை