சிவகாசி பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தம் வாபஸ்

தினமலர்  தினமலர்
சிவகாசி பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தம் வாபஸ்

விருதுநகர்: கடந்த 25 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

சிவகாசியில் 850க்கு மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இதில் 5 லட்சம் தொழிலாளர்கள் வரை உள்ளனர். பட்டாசு ஆலைகளுக்கு சுற்றுசூழல் விதியிலிருந்து விலக்கு அளித்தல், வேலையிழந்த பல லட்சம் பேருக்கு நிவாரணம் என்ற இரு கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 25 நாட்களாக ஆலைகளை மூடி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இப்போராட்டத்தால் தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சுற்றுச்சூழல் விதியில் திருத்தம் கொண்டு வர எம்.பி.,க்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவர் எனவும், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்தார்.

இதனையடுத்து, அமைச்சரின் உறுதிமொழியை ஏற்று 25 நாள் போராட்டத்தை ஆலை உரிமையாளர்கள் வாபஸ் பெற்றனர். வரும் திங்கட்கிழமை(ஜன.,22) முதல் பட்டாசு ஆலைகள் வழக்கம் போல் செயல்படும் என உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

மூலக்கதை