தெ.ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் : வேகப்பந்து வீச்சாளர் ஷர்குல் தாகூருக்கு திடீர் அழைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தெ.ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் : வேகப்பந்து வீச்சாளர் ஷர்குல் தாகூருக்கு திடீர் அழைப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 டெஸ்ட் கொண்ட தொடரில் 2-0 என தென்ஆப்ரிக்க முன்னிலை வகிக்கும் நிலையில், கடைசி டெஸ்ட் வரும் 24ம் தேதி ஜோகனஸ்பர்க்கில் தொடங்க உள்ளது.


இதையடுத்து 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி வரும் பிப். 1ம் தேதி டர்பனில் நடக்கிறது. இதற்கான இந்திய அணியில் டோனி, ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், அக்‌ஷர் பட்டேல், சகால், ஷர்குல் தாகூர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வரும் 24ம் தேதி தென்ஆப்ரிக்கா புறப்படுகின்றனர்.

இந்நிலையில் மும்பை வேகப்பந்து வீச்சாளரான ஷர்குல் தாகூர் உடனடியாக தென்ஆப்ரிக்கா வருமாறு இந்திய அணி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. தற்போது அவர் சாகித் முஸ்டாக் அலி கோப்பை டி. 20 தொடரில் மும்பை அணிக்காக ஆடி வரும் நிலையில் திடீரென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர் இன்று (வெள்ளி) இரவு ஜோகனஸ்பர்க் புறப்படுகிறார். ஆனால் அவர் எதற்காக முன்கூட்டியே தென்ஆப்ரிக்காவிற்கு அழைக்கப்பட்டுள்ளார் என்ற விவரம் தெரியவில்லை.

அணியில் உள்ள வேகப்பந்து வீச்சாளர் யாரேனும் காயம் அடைந்துள்ளார்களா அல்லது 3வது டெஸ்ட்டில் தாகூருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பதில் குழப்பம்  நீடிக்கிறது.

.

மூலக்கதை