சிறந்த ஒரு நாள் மற்றும் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதை வென்றார் விராட் கோலி

தினகரன்  தினகரன்

துபாய் : சிறந்த வீரர்களுக்கான விருது பட்டியலை ஐசிசி  அறிவித்தது. இதன்படி சிறந்த ஒரு நாள் போட்டி வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரராக ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். வளர்ந்து வரும் வீரருக்கான விருதினை பாகிஸ்தான் அணியை சேர்ந்த ஹசன் அலி தேர்வாகியுள்ளார். கடந்த ஆண்டில் சிறந்த நடுவருக்கான விருதினை மராஸ் எராஸ்மஸ் இரண்டாவது முறையாக தட்டி சென்றார்.

மூலக்கதை