6 மாதத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

PARIS TAMIL  PARIS TAMIL
6 மாதத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் சென்னையில் நடந்த ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். உள்ளாட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் பங்கேற்க மாட்டோம் என்றும், வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் கூறினார்.

இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்துக்கு முன்கூட்டி தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது என்று எதிர்க்கட்சியினர் பேசி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது என்று டி.டி.வி.தினகரனும் கூறிவருகிறார். தினகரன் அணி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை பொறுத்தே ஆட்சியின் ஆயுள் காலம் தீர்மானிக்கப்படும் என்றும் பேசுகின்றனர்.

அடுத்த சட்டமன்ற தேர்தலை குறிவைத்துள்ள ரஜினிகாந்திடம் நிருபர்கள் நேற்று, முன்கூட்டி தேர்தல் வந்தால் என்ன முடிவு எடுப்பீர்கள்? என்று கேள்வி எழுப்பியபோது “6 மாதத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார்” என்று பதில் அளித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினிகாந்த் பேட்டி

இதுகுறித்து சென்னை போயஸ் கார்டனில் ரஜினிகாந்திடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- நீங்களும், கமல்ஹாசனும் அரசியலில் இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- அதற்கு காலம் தான் பதில் சொல்லும். கட்சி தொடங்குவதாக அறிவித்த கமலுக்கு வாழ்த்துக்கள்.

கேள்வி:- தற்போதைய அரசியல் கட்சிகள் எம்.ஜி.ஆரின் கொள்கைகளை பின்பற்றுகின்றனவா?

பதில்:- ஓரளவுக்கு...

கேள்வி:- சட்டசபை தேர்தலில் போட்டி என்று அறிவித்துள்ளர்கள், அடுத்த 6 மாதத்தில் சட்டசபை தேர்தல் வந்தால் அதை சந்திப்பீர்களா?

பதில்:- நிச்சயமாக சந்திப்பேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

மூலக்கதை