அ.தி.மு.க.வில் இருந்து 263 பேர் நீக்கம் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

PARIS TAMIL  PARIS TAMIL
அ.தி.மு.க.வில் இருந்து 263 பேர் நீக்கம் ஓ.பன்னீர்செல்வம்எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம்

அ.தி.மு.க. கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், காஞ்சீபுரம் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 58 பேர் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.

அதன்படி, அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி துணைச்செயலாளர் வி.குணசேகரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட முன்னாள் தலைவர் கரிகாலன், பொதுக்குழு உறுப்பினர் ஆலந்தூர் முத்தையா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் அருள்கென்னடி, ஜெயலலிதா பேரவை பொருளாளர் கோகுல்ராஜ், மாவட்ட வக்கீல் அணி இணை செயலாளர் ஆனந்தகுமார், மாவட்ட இலக்கிய அணி இணைச்செயலாளர் தஞ்சை ராஜசேகர், மாவட்ட மீனவர் பிரிவு இணைச்செயலாளர் ரவி, மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் எச்.உதயகுமார்.

மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச்செயலாளர் பீர்முகமது, துணைத்தலைவர் ஆலன் லயனல், பம்மல் நகர எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் கோபி, அனகாபுத்தூர் நகர துணை செயலாளர் பிரகாஷ், 185-வது கிழக்கு வட்ட பொருளாளர் எம்.மது, எம்.ஸ்டாலின்.

நீக்கம்

பரங்கிமலை ஒன்றியத்தை சேர்ந்த நிர்வாகிகள் டி.சி.செல்வமணி, எஸ்.மாலா, கு.காளிதாஸ், ஏ.ஏழுமலை, ஏ.சீனிவாசன் ஆலந்தூர் பகுதியை சேர்ந்த ஏ.என்.லட்சுமிபதி, கோபிநாதன், கண்ணன், பஞ்சாட்சரம், கே.வேம்பரசன், எம்.எஸ்.ரவிச்சந்திரன், செல்வி, எஸ்.ஏழுமலை, செந்தில்குமார், பல்லாவரத்தை சேர்ந்த சாகுல் அமீது, பா.குருமூர்த்தி, எம்.சதீஷ், வி.விஜயகுமார், வி.என்.வாசுதேவன், எம்.முருகேசன், என்.பாபு, கே.ஜி.சிங்காரம், பி.மாரி.

தாம்பரத்தை சேர்ந்த என்.கிருஷ்ணமூர்த்தி, மார்க்கெட் ஜி.பாபு, பி.சிவா, வி.வெங்கடேசன், இ.ஏழுமலை, எல்.புகழேந்தி, வி.ஆறுமுகம், கே.சீராளன், எஸ்.அர்ஜூன், எஸ்.கார்த்திக்கேயன், மஞ்சுளா பிரகாஷ், உஷா ஏழுமலை, வி.எஸ்.சத்தியா, மோகன்ராஜ், கே.பாஸ்கர், ஆர்.ஜி.ஏழுமலை, ஆர்.உதயமணி, ஏ.தணிகாசலம், பழக்கடை எஸ்.ஆறுமுகம், பி.சேகர் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் செயல் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார்கள். கட்சி தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது.

திருப்பூர்-ஈரோடு

இதேபோல் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட திருப்பூர் புறநகர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.சண்முகவேலு உள்பட 53 பேரும், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 152 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள். காஞ்சீபுரம், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்த்து 263 பேர் கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை