துபாயில் கலாட்டா குடும்பத்தின் சார்பில் சிறப்புடன் நடந்த பொங்கல் விழா

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
துபாயில் கலாட்டா குடும்பத்தின் சார்பில் சிறப்புடன் நடந்த பொங்கல் விழா

துபாய் முஸ்ரிப் பூங்காவில் கலாட்டா குடும்பத்தின் சார்பில் பொங்கல் விழா வெகு சிறப்புடன் நடைபெற்றது.இந்த பொங்கல் விழாவை முன்னிட்டு புதுப்பானையில் பொங்கலிட்டு பொங்கல் விழாவை தமிழக பாரம்பர்யத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த விழாவினையொட்டி பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியே நடத்தப்பட்டது. குறிப்பாக உரியடி, கயிறு இழுத்தல், அம்பெறிதல், பலம் பார்த்தல், கல் எடுத்தல், பச்சைக் குதிரை, சில்லுக்கோடு, பல்லாங்குழி, உப்புத் தூக்கல், கிட்டிப்புள், குத்துப் பம்பரம், கோணிப்பை போட்டி, குச்சி விளையாட்டு உள்ளிட்ட விளையாட்டுக்கள் நடைபெற்றது. இதில் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ரவி, கோமதி ரவி குடும்பத்தினர் சிறப்புடன் செய்திருந்தனர். காலை வெண் பொங்கல், வடை, சாம்பார் மதியம் சோறு, வத்தல் குழம்பு, ரசம், அப்பளம் என அனைத்தையும் தமிழக பாரம்பர்யத்துடன் அஜ்மானில் செயல்பட்டு வரும் தஞ்சாவூர் தமிழ் உணவகத்தார் தயாரித்து வழங்கினர். இந்த உணவு ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டிருந்ததாக கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

மூலக்கதை