பத்து சதவீத தொழிலாளர் மட்டுமே பணியில்... 22ம் தேதி சகஜ நிலைக்கு திரும்ப வாய்ப்பு

தினமலர்  தினமலர்
பத்து சதவீத தொழிலாளர் மட்டுமே பணியில்... 22ம் தேதி சகஜ நிலைக்கு திரும்ப வாய்ப்பு

திருப்பூர் : பொங்கல் பண்டிகை முடிந்தும் கூட, முழு அளவில் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாமல் உள்ளதால், திருப்பூர் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

பொங்கல் பண்டிகை, 14,15,16 என மூன்று நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அரசு பஸ் ஊழியர் போராட்டத்தால், கல்வி நிறுவனங்களுக்கு கடந்த, 12ம் தேதியே விடுமுறை அறிவிக்கப்பட்டது. கடந்த, 14ம் தேதி தான் பொங்கல் என்றாலும், முன்தினம் போகி பண்டிகையுடன் பொங்கல் கொண்டாட்டம் துவங்கியது. அதன்பின், 15ம் தேதி மாட்டு பொங்கல், 16ம் தேதி, உழவர் தினம் என தொடர்ந்து ஐந்து நாள் அரசு விடுமுறை.

இதனால், அரசு அலுவலங்களும் செயல்படவில்லை. பனியன் தொழில் நகரான திருப்பூரில் பல்வேறு வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பல லட்சம் பேர் வசிக்கின்றனர். வட மாநிலத்தினர் ஏராளமானோரும், திருப்பூரில் தங்கி பணியாற்றுகின்றனர். வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலா ளர்கள் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது கிடைக்கும் நீண்ட விடுமுறையைப் பயன்படுத்தி, தங்கள் சொந்த ஊர்கள் செல்வது வழக்கம்.

அவ்வகையில், தொழிலாளர்கள், 12 மற்றும் 13 தேதிகளில் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பி öசன்றனர். திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட், குமரன் ரோடு, தாராபுரம் ரோடு, பி.என். ரோடு, காங்கயம் ரோடு, ஊத்துக்குளி ரோடு, அவிநாசி ரோடு போன்ற முக்கிய ரோடுகளில் ஏராளமான கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள் உள்ளன.

பொங்கல் தொடர் விடுமுறையால், இந்த ரோடுகள் அனைத்தும், ஐந்து நாட்களாக வெறிச்சோடி காணப்பட்டன. நேற்று முன்தினம் பண்டிகை விடுமுறை முடிந்த நிலையில், நேற்று வழக்கம் போல் அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் பனியன் நிறுவனங்கள் செயல்பட்டன. இருப்பினும் வர்த்தக நிறுவனங்கள், கடைகள், தொழிற் சாலைகளில் முழு அளவிலான தொழிலாளர்கள், இன்னும் வேலைக்கு திரும்பவில்லை.இதனால், நேற்று திருப்பூரின் முக்கிய ரோடுகள் வழக்கமான பரபரப்பின்றி காணப்பட்டன. தொழிற்சாலைகளில், மிக குறைந்தளவிலான தொழிலாளர் கள் மட்டுமே வேலைக்கு வந்திருந்தனர்.

10 சதவீதம் மட்டுமே தொழிலாளர் வருகை:
பொங்கலுக்குப்பின், நேற்று, 50 சதவீத பின்னலாடை நிறுவனங்களே இயக்கத்தை துவக்கின. மீதமுள்ளவை, நேற்றும் பூட்டியே கிடந்தன. இயக்கத்தை துவக்கிய நிறுவனங்களிலும், தொழிலா ளர் வருகை மிக மிக குறைவாகவே இருந்தது; 10 சதவீத தொழிலாளர்களே பணிக்கு திரும்பியுள்ளனர். சொற்ப தொழிலாளர்களே இருந்ததால், நேற்று ஆடை உற்பத்தி பணிகள் நடைபெறவில்லை. சில நிறுவனங்களில், ஐந்து, எழு என ஒற்றை எண்ணிக்கையிலேயே, தொழிலாளர் வந்தனர். அவர்களும், மதியத்துக்கு பின், விடுப்பில் சென்றுவிட்டனர். பெரும்பாலான ஏற்றுமதி நிறு வனங்கள், நாளை முதல் இயக்கத்தை துவக்க உள்ளன. சுற்றுலா, சொந்த ஊர்களுக்குச்சென்றோர் என, பண்டிகை கொண்டாட்டங்கள் முடிந்து, தொழிலாளர்கள், படிப்படியாக, திருப்பூர் நோக்கி திரும்புவர். அடுத்த வாரம், தொழில் துறை இயல்பு நிலைக்கு திரும்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னலாடை துறையினர் கூறியதாவது: பொங்கல் விடுமுறைக்கு பின், இன்று (நேற்று) ஆடை உற்பத்தி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. கைவசம் ஆர்டர் குறைவாக உள்ளதாலும், தொழிலாளர் வருகை குறைவாக இருக்கும் என்பதாலும், 50 சதவீத நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. திறக்கப்பட்டிருந்த நிறுவனங்களிலும், 10 சதவீத தொழிலாளர்களே பணிக்கு திரும்பியுள்ளனர். தொழிலாளர்கள், படிப்படியாக பணிக்கு திரும்பிவிடுவர். வரும் 22ம் தேதிக்குள், அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு வந்துவிடுவர். வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து உற்பத்தி துறைக்கு, அதிகளவு ஆர்டர்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது; எனவே, பின்ன லாடை துறை, வேகம் பெறும், என்றனர்.

மூலக்கதை