அருண் ஜெட்லி தலைமையில் இன்று ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்: ஓ.பி.எஸ் பங்கேற்பு

விகடன்  விகடன்
அருண் ஜெட்லி தலைமையில் இன்று ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்: ஓ.பி.எஸ் பங்கேற்பு

டெல்லியில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சிலின் 24-வது கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில், மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.எஸ்.டி வரி விதிப்புக்குப் பின்னர் விலை ஏற்றப்பட்ட பல்வேறு பொருள்களின் விலையைக் குறைக்குமாறு மாநில அரசாங்கங்கள் கோரிக்கை வைத்திருந்தன. இந்நிலையில், இன்று கூடும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், அந்தப் பொருள்களுக்கான வரி விகிதம் குறைக்கப்படும் என்று தெரிகிறது. மேலும், இந்தக் கூட்டத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள், ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவரப்படுமா என்ற  எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தக் கூட்டத்தில், தமிழக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்கிறார்.

மூலக்கதை