சரக்கு – சேவை வரியில் ரியல் எஸ்டேட் இணைப்பு?

தினமலர்  தினமலர்
சரக்கு – சேவை வரியில் ரியல் எஸ்டேட் இணைப்பு?

புதுடில்லி : ரியல் எஸ்­டேட் துறையை, ஜி.எஸ்.டி.,யில் சேர்ப்­பது குறித்து, இன்று முக்­கிய முடிவு எடுக்­கப்­படும் என, தெரி­கிறது.

இன்று, டில்­லி­யில், மத்­திய நிதி­ய­மைச்­சர், அருண் ஜெட்லி தலை­மை­யில், ஜி.எஸ்.டி., கவுன்­சி­லின், 24வது கூட்­டம் நடக்­கிறது. மத்­திய பட்­ஜெட் தாக்­க­லுக்கு, இரு வாரங்­களே உள்ள நிலை­யில் நடை­பெ­றும் இக்­கூட்­டத்­தில், ஜி.எஸ்.டி.,யில், ரியல் எஸ்­டேட் துறை இணைப்பு, ஒரு­சில பொருட்­களின் வரி குறைப்பு உள்­ளிட்ட, முக்­கிய முடி­வு­கள் எடுக்­கப்­படும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சாதா­ரண மக்­கள் பயன்­ப­டுத்­தும் பொருட்­கள், வீட்டு பயன்­பாட்டு சாத­னங்­கள், வேளாண் பொருட்­கள், சிமென்ட், உருக்கு உள்­ளிட்ட பொருட்­க­ளுக்கு, வரி குறைப்பு அல்­லது வரிச்­ச­லு­கை­கள் கிடைக்க வாய்ப்பு உள்­ளது. இன்­றைய கூட்­டத்­தில், ஜி.எஸ்.டி.,யில், ரியல் எஸ்­டேட் துறையை கொண்டு வந்து, முத்­தி­ரைத்­தாள் தீர்வை மற்­றும் பதிவு கட்­ட­ணத்தை இணைத்து, 12 சத­வீத வரி நிர்­ண­யம் செய்­வது குறித்து முடி­வெ­டுக்­கப்­படும். தற்­போது, மூன்று படி­வங்­களில், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­கல் செய்­யும் நடை­மு­றைக்கு பதி­லாக, ஒரே படி­வத்தை பயன்­ப­டுத்­து­வது குறித்­தும் தீர்­மா­னிக்­கப்­படும்.

இத­னால், வரி செலுத்­து­வோர், ஆண்­டுக்கு, 37 முறை கணக்கு தாக்­கல் செய்­வது, 12 ஆக குறை­யும். சரக்கு போக்­கு­வ­ரத்­துக்கு, பிப்., 1 முதல், ‘இ – வே பில்’ அறி­மு­க­மாக உள்­ளது. தற்­போது, சோதனை அடிப்­ப­டை­யில் நடை­பெ­றும் இத்­திட்­டத்­தில் உள்ள இடர்ப்­பா­டு­க­ளுக்கு, ஜி.எஸ்.டி., கூட்­டத்­தில் தீர்வு காணப்­படும்.
முக்­கிய சர்­வ­தேச சந்­தை­யில் இறால் விலை
அளவு/ கிரேடு கருப்பு புலி இறால்(தலை­யில்­லா­தது) வனாமி (தலை­இல்­லா­தது) கருப்பு புலி இறால் (தலை­யில்­லா­தது) வனாமி (தலை­இல்­லா­தது) உறைந்த, தலை, ஷெல் உள்ள வெள்ளை16/20 16.18 10.45 17.97 11.35 13.1021/25 14.68 9.21 16.31 9.81 10.0026/30 13.69 8.21 14.77 9.26 7.0031/40 10.45 7.96 6.50விலை: ஜன., 17 நில­வ­ரப்­படி (அமெ­ரிக்க டாலர் / கிலோ)

மூலக்கதை