வரி குறைப்பு பயனை நுகர்வோருக்கு வழங்காத எச்.யு.எல்.,க்கு, ‘நோட்டீஸ்’

தினமலர்  தினமலர்
வரி குறைப்பு பயனை நுகர்வோருக்கு வழங்காத எச்.யு.எல்.,க்கு, ‘நோட்டீஸ்’

புதுடில்லி : கடந்த, 2017 நவம்­ப­ரில், 178 பொருட்­க­ளுக்கு, ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரி குறைக்­கப்­பட்­டது.

இந்த வரி குறைப்­பின் பயனை, நுகர்­வோ­ருக்கு வழங்­காத நிறு­வ­னங்­கள் மீது, தேசிய கொள்ளை லாப தடுப்பு ஆணை­யத்­தின் கீழ், நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என, மத்­திய அரசு தெரி­வித்­தது. இந்த வகை­யில், இந்த ஆணை­யத்­தின் கீழ் செயல்­படும், டி.ஜி.எஸ்., அமைப்பு, ‘மெக்­டொ­னால்டு’ உண­வக தனி­யு­ரிமை கிளை­கள், ஹோண்டா கார் முக­வர்­கள் உட்­பட, ஐந்து நிறு­வ­னங்­க­ளுக்கு, ‘நோட்­டீஸ்’ அனுப்பி உள்­ளது. அதில், ஜி.எஸ்.டி., பயனை, நுகர்­வோ­ருக்கு வழங்­கா­தது குறித்து விளக்­கம் அளிக்­கு­மாறு கோரப்­பட்டு உள்­ளது.

இந்­நி­லை­யில், ஆறா­வ­தாக, பற்­பசை, சோப்பு, ஷாம்பூ உள்­ளிட்ட வீட்டு பயன்­பாட்டு பொருட்­களை விற்­பனை செய்­யும், ஹிந்­துஸ்­தான் யூனி­லி­வர் நிறு­வ­னத்­திற்கு, விலை குறைப்பு செய்­யா­தது குறித்து, நோட்­டீஸ் அனுப்­பப்­பட்டு உள்­ளது. குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்­டால், வசூ­லிக்­கப்­பட்ட கூடு­தல் தொகையை, 18 சத­வீத வட்­டி­யு­டன், நுகர்­வோ­ருக்கு திரும்­பத் தரு­வ­து­டன், அப­ரா­த­மும் செலுத்த வேண்­டும்.இதற்­கி­டையே, கூடு­தல் எடை­யு­டன் பொருட்­களை விற்­ப­னைக்கு அனுப்பி வரு­வ­தாக, ஹிந்­துஸ்­தான் லீவர் நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

மூலக்கதை