இலங்கையை 12 ஓட்டங்களால் வீழ்த்திய சிம்பாப்வே

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கையை 12 ஓட்டங்களால் வீழ்த்திய சிம்பாப்வே

மும்முனை ஒருநாள் தொடரில் இன்று நடைபெற்ற சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் சிம்பாப்வே அணி 12 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
 
டாக்காவில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 290 ஓட்டங்களைப் பெற்றது.
 
துடுப்பாட்டத்தில் மசகட்ஸா 74 ஓட்டங்களையும் சிக்கந்தர் ராசா ஆட்டமிழக்காமல் 81 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
பந்து வீச்சில் அசேல குணரத்ன 3 விக்கெட்களையும் திசர பெரேரா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர்.
 
291 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.1 ஓவரில் 278 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
 
துடுப்பாட்டத்தில் குசல் ஜனித் பெரேரா 80 ஓட்டங்களையும் திசர பெரேரா 64 ஓட்டங்களையும் குவித்தனர்.
 
பந்து வீச்சில் டென்டாய் சட்டாரா 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
 
தொடரின் முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணி 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
 
நாளை மறுதினம் (19) நடைபெறவுள்ள போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன.

மூலக்கதை