செதேஷ்வர் புஜாரா, ரோகித் ஷர்மா வீட்டுல புலி... வெளியில எலி!

தினகரன்  தினகரன்

இந்திய அணி பேட்ஸ்மேன்கள் செதேஷ்வர் புஜாரா, ரோகித் ஷர்மா இருவரும் இந்திய மண்ணில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக ரன் குவித்துள்ள நிலையில், வெளிநாட்டு தொடர்களில் சாதிக்க முடியாமல் தடுமாறி வருகின்றனர். இந்தியாவில் விளையாடிய 9 டெஸ்டில் சராசரியாக 85.44 ரன் குவித்துள்ள ரோகித், வெளிநாட்டில் விளையாடிய 16 டெஸ்டில் சராசரியாக 25.35 ரன் மட்டுமே எடுத்துள்ளார். அதே போல புஜாராவின் சராசரி ரன் குவிப்பும் சொந்த மண்ணில் 62.97, வெளிநாட்டில் 33.76 என தலைகீழாக உள்ளது.

மூலக்கதை