2 இன்னிங்சிலும் ரன் அவுட்... புஜாரா மோசமான சாதனை!

தினகரன்  தினகரன்

செஞ்சுரியன்: செஞ்சுரியன் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஒரு ரன் கூட எடுக்காமல் முதல் பந்திலேயே ரன் அவுட்டான செதேஷ்வர் புஜாரா, 2வது இன்னிங்சில் 19 ரன் எடுத்து ரன் அவுட்டானார். 27வது ஓவரின் முதல் பந்தை பார்திவ் பவுண்டரி நோக்கி அடித்தார். துடிப்பாக செயல்பட்ட என்ஜிடி அதை தடுத்து நிறுத்த, டி வில்லியர்ஸ் பந்தை எடுத்து மின்னல் வேகத்தில் எறிய... விக்கெட் கீப்பர் டி காக் ஸ்டம்புகளை தகர்த்தார். 3வது ரன் எடுப்பதற்காக ஓடிய புஜாரா டைவ் அடித்தும் பலனில்லாமல் பரிதாபமாக ரன் அவுட்டாகி வெளியேறினார். இதன் மூலமாக, ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் ரன் அவுட்டான முதல் இந்திய வீரர் என்ற மோசமான சாதனை அவருக்கு சொந்தமானது. டெஸ்ட் வரலாற்றில் இப்படி 2 இன்னிங்சிலும் ரன் அவுட்டான 23வது வீரர் புஜாரா. கடந்த 17 ஆண்டுகளில் முதல் வீரர்.

மூலக்கதை