முடிவுக்கு வந்தது விராத் கோஹ்லி தலைமையிலான வெற்றி நடை...

தினகரன்  தினகரன்

செஞ்சுரியன்: விராத் கோஹ்லி தலைமையிலான இந்தியா தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி வெற்றி நடை போட்டு வந்தது. 2015ல் வங்கதேசத்துக்கு எதிராக நடந்த தொடரை டிரா செய்த இந்தியா, அதன் பிறகு விளையாடிய 9 தொடர்களிலும் வெற்றி பெற்றிருந்தது. மொத்தம் 10 தொடரில் தோல்வி காணாமல் இருந்த இந்திய அணியின் வெற்றி நடை, தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணத்தில் முடிவுக்கு வந்துள்ளது. இதில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஒரு முறை, இலங்கைக்கு எதிராக 2 முறை மட்டும் வெளிநாட்டு தொடர்களில் பெற்ற வெற்றிகளாகும். மற்ற 6 வெற்றிகளும் சொந்த மண்ணில் கிடைத்தவை. தற்போது பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக வெளிநாட்டு தொடரில் மண்ணைக் கவ்வியுள்ளதால், குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் அணி என்ற விமர்சனம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.

மூலக்கதை