மைனஸ் 67 டிகிரி குளிர் : உறைந்தது ரஷ்யா

தினமலர்  தினமலர்
மைனஸ் 67 டிகிரி குளிர் : உறைந்தது ரஷ்யா

மாஸ்கோ: ரஷ்யாவின் யாகுதியா பிராந்தியத்தில், கண் இமைகள் கூட உறைந்துபோகும் அளவுக்கு கடும் குளிருடன், பனிப்பொழிவும் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம், மைனஸ் 67 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு கடும் குளிர் நிலவியது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து, 5,300 கி.மீ., தொலைவில் உள்ள யாகுதியா பிராந்தியத்தில், இந்த ஆண்டில் மிகவும் கடும் குளிர் நிலவுகிறது. இங்குள்ள கிராமங்களில், மைனஸ் 40 டிகிரி செல்ஷியஸ் குளிர் இருந்தாலும், பள்ளிகள் இயங்கும். ஆனால், நேற்று முன்தினம், மைனஸ் 67 டிகிரி அளவுக்கு கடும் குளிர் நிலவியதால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.உலகிலேயே அதிக அளவில் குளிர் நிலவும் ஒய்மகோன் பகுதியில், 2013ல் மைனஸ் 71 டிகிரி செல்ஷியஸ் குளிர் நிலவியதுதான் மிகவும் குறைந்தபட்ச வெப்பநிலை. கடும் குளிர் நிலவும் நிலையில், கண் இமைகள் உறைந்து போனது, பனிக் குவியல்களுக்கு இடையே, மக்கள், 'செல்பி' எடுப்பது போன்ற படங்களை, உள்ளூர், 'டிவி' சேனல்கள் வெளியிட்டுள்ளன.

மூலக்கதை