ஐ.பி.ஓ., வருகிறது கேலக்ஸி சர்பக்டன்ட்ஸ்

தினமலர்  தினமலர்
ஐ.பி.ஓ., வருகிறது கேலக்ஸி சர்பக்டன்ட்ஸ்

புதுடில்லி : மும்­பை­யைச் சேர்ந்த, கேலக்ஸி சர்­பக்­டன்ட்ஸ் நிறு­வ­னம், குளி­யல் சோப்பு, சலவை பவு­டர், கேசம் மற்­றும் சரும பரா­ம­ரிப்பு பொருட்­கள் உள்­ளிட்­ட­வற்­றுக்­கான, ரசா­ய­னப் பொருட்­கள் தயா­ரிப்­பில் ஈடு­ப­டு­கிறது.

இந்­நி­று­வ­னம், புதிய பங்கு வெளி­யீட்­டிற்கு அனு­மதி கோரி, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’க்கு, 2017 நவம்­ப­ரில் விண்­ணப்­பித்­தது. இதற்கு, தற்­போது அனு­மதி அளிக்­கப்­பட்டு உள்­ளது. இதை­ய­டுத்து இந்­நி­று­வ­னம், விரை­வில் பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்கி, 1,000 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மிட்டு உள்­ளது.

ஏற்­க­னவே இந்­நி­று­வ­னம், 2011ல், 200 கோடி ரூபாய் திரட்­டும் நோக்­கில், பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்­கி­யது. அப்­போது, போதிய அள­விற்கு முத­லீட்­டா­ளர்­களின் ஆத­ரவு கிடைக்­கா­த­தால், பங்கு வெளி­யீட்டை திரும்­பப்பெற்­றது. தற்­போது, நிறு­வ­னம் நன்கு வளர்ச்சி அடைந்­துள்­ள­தால், பங்கு வெளி­யீடு வெற்றி பெறும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மூலக்கதை