பதஞ்சலி நிறுவன பொருட்கள் இனி அமேசான், பிளிப்கார்ட்டிலும் கிடைக்கும்

தினமலர்  தினமலர்
பதஞ்சலி நிறுவன பொருட்கள் இனி அமேசான், பிளிப்கார்ட்டிலும் கிடைக்கும்

புதுடில்லி : பாபா ராம்­தே­வின், பதஞ்­சலி ஆயுர்­வேத நிறு­வ­னம், அதன் பல்­வேறு பொருட்­களை, எட்டு வலை­தள சந்தை நிறு­வ­னங்­கள் மூலம் விற்க, ஒப்­பந்­தம் செய்­துள்­ளது.

இது குறித்து, பாபா ராம்­தேவ் கூறி­ய­தா­வது: பதஞ்­சலி பொருட்­க­ளுக்கு, நுகர்­வோ­ரி­டம் வர­வேற்பு பெருகி வரு­கிறது. இந்­நி­லை­யில், நுகர்­வோர் மேலும் சுல­ப­மாக, பதஞ்­சலி பொருட்­களை பெற வேண்­டும் என்ற நோக்­கத்­தில், வலை­த­ளங்­க­ளி­லும் விற்­ப­னையை துவக்கி உள்­ளோம். இதற்­காக, ‘அமே­சான் இந்­தியா, குரோ­பர்ஸ், ஷாப்க்­ளுஸ், பிளிப்­கார்ட், பிக்­பாஸ்­கட், பேடி­எம் மால்’ உட்­பட, எட்டு வலை­தள சந்தை நிறு­வ­னங்­க­ளு­டன் ஒப்­பந்­தம் செய்­துள்­ளோம்.

இத்­து­டன், மருத்­து­வர்­கள் பரிந்­து­ரை­யு­டன், பதஞ்­சலி மருந்­து­களை, நெட்­மெட்ஸ், 1 எம்.ஜி., ஆகிய வலை­தள சந்­தை­களில் வாங்க வசதி செய்­யப்­பட்டு உள்­ளது. வலை­த­ளங்­களில், பதஞ்­சலி பொருட்­கள் அனைத்­தும், கடை­களில் விற்­கப்­படும் விலைக்கே வழங்­கப்­படும்; எவ்­வித தள்­ளு­படி சலு­கை­களும் வழங்­கப்­பட மாட்­டாது. கடை­களின் விற்­பனை பாதிக்­கப்­ப­டக் கூடாது என்ற நோக்­கத்­தில், இந்த முடிவு எடுக்­கப்­பட்டு உள்­ளது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை