2018ம் ஆண்டில் முதல் சாதனை வீரர்!

PARIS TAMIL  PARIS TAMIL
2018ம் ஆண்டில் முதல் சாதனை வீரர்!

 அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றுள்ளது.

 
மெல்பர்னில் இடம்பெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.
 
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட் இழப்பிற்கு 304 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
 
பதலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 48.2 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு வெற்றி இலக்கை அடைந்தது.
 
இந்த போடடியில் இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜேசன் ரோய் நேற்றைய போட்டியில் 151 பந்துகளில் 180 ஓட்டங்களை குவித்து சாதனை படைத்திருந்தார்.
 
இவ்வருடத்தில் ஒருநாள் போட்டிகளில் நபரொருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
 
5 ஆறு ஓட்டங்கள் மற்றும் 16 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
 
மேலும் , 151 நிமிடங்களில் அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டமை சிறப்பம்சமாகும்.

மூலக்கதை