கடலில் தத்தளித்த 400 ஐரோப்பிய ஒன்றிய புகலிடக் கோரிக்கையாளர்கள்!

PARIS TAMIL  PARIS TAMIL
கடலில் தத்தளித்த 400 ஐரோப்பிய ஒன்றிய புகலிடக் கோரிக்கையாளர்கள்!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு புகலிடக் கோரிக்கையை முன்வைத்துப் பயணித்த 400 புகலிடக் கோரிக்கையாளர்களை, லிபிய கரையோர காவல் பிரிவினர் நேற்று (திங்கட்கிழமை) பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
 
மேற்படி 400 பேருடனும், மத்தியதரைக் கடல் வழியாகப் பயணித்த 2 படகுகளின் இயந்திரங்களிலும் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடலில் இவர்கள் தத்தளித்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில், இவர்களை  காப்பாற்றியுள்ளதாக, லிபிய கரையோர காவல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
 
இவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அடங்குவதாகவும், அவர்கள் கூறியுள்ளனர்.
 
ஆபிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு புகலிடக் கோரிக்கையை முன்வைத்துச் செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு, லிபியா முக்கிய போக்குவரத்துத் தளமாகக் காணப்படுகின்றது. இந்நிலையில், கடந்த 4 வருடங்களில் மாத்திரம் மத்தியதரைக் கடல் வழியாக சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை