35 ஆண்டுகளுக்கு பின் சவுதியில் திரைப்படங்களை திரையிட அனுமதி

தினகரன்  தினகரன்

அபுதாபி : சவுதியில் 35 ஆண்டுகளுக்கு பின் திரைப்படங்களை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக அனிமேஷன் திரைப்படங்கள் திரைப்படவுள்ளன. மன்னர் முகமத் பின் சல்மான் ஆட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக சவுதியில் திரைப்படங்களை திரையிடுவதற்கு கடந்த ஆண்டு டிசம்பர் 11ம்  தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2030ம் ஆண்டுக்குள் 300 திரையரங்குகளை கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்த நிலையில் திரைப்படங்களை திரையிடுவதற்காக ஜெட்டாவில் உள்ள கலாச்சார மையத்தில் ப்ரொஜெக்டர் கருவி பொறுத்தப்பட்டுள்ளது. இடைவெளி நேர சிற்றுண்டிக்காக பாப்கார்ன் மிஷனும் அங்கு வைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சிறுவர்களுக்கான முழு நீல அனிமேஷன் திரைப்படங்கள் இந்த வார விடுமுறை நாட்களில் திரையிடப்பட உள்ளன. The Emoji Movie and Captain Underpants என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அனிமேஷன் திரைப்படங்கள்  வரும் ஜூலை 28ம் தேதி திரையிடபபட உள்ளது. 

மூலக்கதை