மொத்த விலை பணவீக்கம் குறைந்தது

தினமலர்  தினமலர்
மொத்த விலை பணவீக்கம் குறைந்தது

புதுடில்லி:உண­வுப் பொருட்­கள் விலை குறை­வால், நாட்­டின் மொத்த விலை பண­வீக்­கம், 2017 டிசம்­ப­ரில், 3.58 சத­வீ­த­மாக சரி­வ­டைந்­தது. இது, நவம்­ப­ரில், 3.93 சத­வீ­தம்; 2016 டிசம்­ப­ரில், 2.10 சத­வீ­த­மாக இருந்­தது.
கச்சா எண்­ணெய் விலை உயர்ந்த போதி­லும், காய்­க­றி­கள் விலை சற்று குறைந்­த­தால், மொத்த விலை பண­வீக்­கம் குறைந்­துள்­ளது.நவம்­ப­ரில், 59.80 சத­வீ­த­மாக இருந்த காய்­க­றி­கள் பண­வீக்­கம், டிசம்­ப­ரில், 56.46 சத­வீ­த­மாக சரி­வ­டைந்­தது. எனி­னும், வெங்­கா­யம் மற்­றும் பழங்­கள் பண­வீக்­கம், முறையே, 197.05 சத­வீ­தம் மற்­றும் 11.99 சத­வீ­த­மாக அதி­க­ரித்து உள்ளன.முட்டை, மாமி­சம், மீன் ஆகி­ய­வற்­றின் பண­வீக்­கம், 1.67 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது.
எரி­பொ­ருள் மற்­றும் மின் துறை பண­வீக்­கம், 9.16 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. தயா­ரிப்பு பொருட்­கள் பண­வீக்­கம், 2.61 சத­வீ­த­மாக இருந்­தது.டிசம்­ப­ரில், காய்­க­றி­கள் விலை­யேற்­றத்­தால், சில்­லரை பண­வீக்­கம், 5.21 சத­வீ­த­மாக உயர்ந்­துஉள்­ளது.நடப்பு நிதி­யாண்­டில், சில்­லரை பண­வீக்க இலக்கு, 4.3 – 4.7 சத­வீ­த­மாக நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது.இதற்­கி­டையே, மத்­திய அரசு, 2017 அக்., மொத்த விலை பண­வீக்­கத்தை, 3.59 சத­வீ­தத்­தில் இருந்து, 3.68 சத­வீ­த­மாக மறு­ம­திப்­பீடு செய்­துள்­ளது.
தேவை அதிகரிப்புரிசர்வ் வங்கி, சில்­லரை பண­வீக்க அடிப்­ப­டை­யில், வங்­கி­க­ளுக்கு வழங்­கும் கட­னுக்­கான, ‘ரெப்போ’ வட்டி விகி­தத்தை நிர்­ண­யிக்­கிறது.ஏழா­வது ஊதி­யக் குழு பரிந்­து­ரை­யால், மத்­திய அரசு ஊழி­யர்­களின் ஊதி­யம் உயர்ந்து,தேவை அதி­க­ரித்­து­ளது. இத்­து­டன், கச்சா எண்­ணெய் விலை­யும் தொடர்ந்து உயர்ந்து வரு­கிறது. இது போன்ற கார­ணங்­க­ளால், ரிசர்வ் வங்கி, அக்., மற்­றும் டிசம்­ப­ரில் வெளி­யிட்ட நிதிக் கொள்­கை­யில், ‘ரெப்போ’ வட்­டி­யில் மாற்­றம் செய்­ய­வில்லை.

மூலக்கதை